மைனாவுக்கு பதிலடி கொடுத்த விக்ரமன் !

  • December 30, 2022 / 01:15 PM IST

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிகப்பெரிய நிகழ்ச்சி பிக் பாஸ் . இதுவரை 5 சீசன் நடந்து முடிந்துள்ளது . இந்நிலையில் பிக்பாஸ் 6-வது சீசன் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

இந்நிலையில் 80 நாள் கடந்து போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்த வார கேப்டன் பதவிக்கு நடந்த டாஸ்கில் வென்று முதல் முறையாக கேப்டன் பதவியை அடைந்துள்ளார் அமுதவாணன் .

இந்நிலையில் இந்த வாரம் பிரீஸ் டாஸ்க் நடந்து வந்தது . ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த டாஸ்க் இது தான் . போட்டியாளர்களின் குடும்பத்தினர் இந்த டாஸ்கில் பங்கேற்றனர் . நேற்றோடு இந்த டாஸ்க் நிறைவுப்பெற்றது . இந்நிலையில் இன்று வெளியாகி உள்ள முதல் ப்ரோமோவில் மைனா விக்ரமனை பாத்து
எதற்கு எடுத்தாலும் ஒப்பினியன் சொல்வது சரியில்லை என்று கூறுகிறார் இதற்கு பதில் அளிக்கும் விக்ரமன் எந்த ஒரு பிரச்சனைக்கும் நீங்கள் வீட்டில் குரல் கொடுப்பதில்லை இதனால் இருவருக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டு உள்ளது .

Read Today's Latest Ott Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus