விக்ரம் நடிப்பில் கோப்ரா திரைப்பட ஷூட்டிங் எப்போது?!

  • September 18, 2020 / 12:00 PM IST

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் “கோப்ரா”. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் இந்த படம் லாக்டவுன் முடிந்ததும் இதர வேலைகள் தொடங்கும் என்று ஏற்கனவே செய்தி வெளியிட்டு இருந்தார்கள்.

இந்தப் படத்தில் நடிகர் விக்ரமுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, மியா ஜார்ஜ், இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ரஷ்யாவில் நடந்து கொண்டிருந்த சமயத்தில் கொரோனா பரவல் ஏற்பட்டது. இதனால் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.

தற்போது வெளிநாடு செல்வதற்கான தடை உள்ளதால் உள்நாட்டில் உள்ள காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாகவும் இந்த படப்பிடிப்பு அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து தொடங்கும் என்றும் கூறியுள்ளார்கள்.

அதுமட்டுமின்றி இந்த படத்தின் படப்பிடிப்பை தீபாவளிக்குள் முடித்துவிட்டு 2021 ஆம் ஆண்டு சம்மர் வேலையில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம் திரைப்படக்குழு.

ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் “தும்பி துள்ளல்” என்ற இந்த படத்தின் சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடையே தற்போது வைரலாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus