விக்ரமின் ‘கோப்ரா’ திரைப்படத்தின் ஷூட்டிங் அப்டேட்!

  • December 16, 2020 / 08:02 PM IST

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் “கோப்ரா”. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் இந்த படம் லாக்டவுன் முடிந்ததும் இதர வேலைகள் தொடங்கும் என்று ஏற்கனவே செய்தி வெளியிட்டு இருந்தார்கள்.

இந்தப் படத்தில் நடிகர் விக்ரமுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, மியா ஜார்ஜ், இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ரஷ்யாவில் நடந்து கொண்டிருந்த சமயத்தில் கொரோனா பரவல் ஏற்பட்டது.

இதனால் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவலை வெளியிட்டிருந்தார்கள். தற்போது படப்பிடிப்பு குழு கொல்கத்தா சென்றுள்ளதாகவும், அடுத்த ஸ்கேட்டியூல் அங்கு படம்பிடிக்கப்படும் என்றும் செய்தி வந்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus