விக்ரமின் கோப்ரா திரைப்படத்தில் இணைந்த கிரிக்கெட் வீரர்!

  • October 27, 2020 / 07:20 PM IST

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் “கோப்ரா”. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் இந்த படம் லாக்டவுன் முடிந்ததும் இதர வேலைகள் தொடங்கும் என்று ஏற்கனவே செய்தி வெளியிட்டு இருந்தார்கள்.

இந்தப் படத்தில் நடிகர் விக்ரமுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, மியா ஜார்ஜ், இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ரஷ்யாவில் நடந்து கொண்டிருந்த சமயத்தில் கொரோனா பரவல் ஏற்பட்டது.

இதனால் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், சமீபத்தில் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு ஓரளவு நிறைவடைந்த நிலையில், தற்போது இந்த படத்தின் டப்பிங் வேலைகள் தொடங்கியதாக திரைப்படக்குழு அதிகாரபூர்வமான தகவலை வெளியிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து இன்று பிறந்தநாளை கொண்டாடிய பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதானுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம், கோப்ரா திரைப்படத்தில் நடிகராக உங்களை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமையடைகிறோம். விரைவில் உங்களை செட்டில காண ஆவலாக காத்திருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்கள். இதன் மூலம் இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்பது தெரிகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus