விக்ரம் – அஜய் ஞானமுத்து கூட்டணியில் வெளியான ‘கோப்ரா’… வைரலாகும் VFX BREAKDOWN வீடியோ!

  • October 5, 2022 / 10:33 AM IST

சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். ஒவ்வொரு படத்துக்கும் இவர் தனது கெட்டப்பை மாற்றி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கி வருகிறார். விக்ரம் நடிப்பில் ‘கோப்ரா, துருவ நட்சத்திரம்’ மற்றும் இயக்குநர் பா.இரஞ்சித் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் விக்ரமின் நடிப்புக்கு சரியான தீனி போடும் வகையில் அமைந்த படம் ‘கோப்ரா’. இந்த படம் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் திரையரங்குகளில் ரிலீஸானது.

இந்த படத்தை ‘டிமான்ட்டி காலனி’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்க, ஹீரோயினாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருந்தார். மேலும், மிக முக்கிய ரோல்களில் இர்பான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், மிருணாளினி ரவி, ரோஷன் மேத்யூ, ரோபோ ஷங்கர், மியா ஜார்ஜ், மீனாக்ஷி, ஜான் விஜய் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இந்த படத்துக்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். தற்போது, இப்படத்தின் VFX BREAKDOWN வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus