விக்ரம் ரசிகர்களின் ப்ளேலிஸ்டில் இடம்பிடித்த ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் ‘HIS NAME IS JOHN’ பாடல்!

  • July 19, 2023 / 11:25 AM IST

சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். ஒவ்வொரு படத்துக்கும் விக்ரம் தனது கெட்டப்பை மாற்றி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கி வருகிறார். இவர் நடிப்பில் ‘துருவ நட்சத்திரம், தங்கலான்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தை டாப் இயக்குநர்களில் ஒருவரான கெளதம் மேனன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன், ராதிகா சரத்குமார், திவ்யதர்ஷினி ஆகியோர் நடித்துள்ளனர்.

இதற்கு பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். ஏற்கனவே, ரிலீஸ் செய்யப்பட்ட இதன் டீசர்கள் மற்றும் ஒரு பாடல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. தற்போது, இந்த படத்தின் செகண்ட் சிங்கிள் டிராக்கான ‘HIS NAME IS JOHN’-ஐ ரிலீஸ் செய்துள்ளனர். இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Read Today's Latest Videos Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus