சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். ஒவ்வொரு படத்துக்கும் விக்ரம் தனது கெட்டப்பை மாற்றி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கி வருகிறார். இவர் நடிப்பில் ‘துருவ நட்சத்திரம், தங்கலான்’ மற்றும் SU.அருண்குமார் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தை டாப் இயக்குநர்களில் ஒருவரான கெளதம் மேனன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் ரித்து வர்மா, பார்த்திபன், சிம்ரன், ராதிகா சரத்குமார், திவ்யதர்ஷினி ஆகியோர் நடித்துள்ளனர்.
இதற்கு பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஏற்கனவே, ரிலீஸ் செய்யப்பட்ட இதன் டீசர்கள், ட்ரெய்லர்கள் மற்றும் 2 பாடல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது.
இப்படத்தின் முதல் பாகத்தை வருகிற நவம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இந்த படத்தின் ‘நரைச்ச முடி’ பாடலை ரிலீஸ் செய்துள்ளனர். இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
#NarachaMudi / #KarichaeKalle is here to make you fall in love all over again🎵🫶🏼
A @Jharrisjayaraj melody from #DhruvaNatchathiram / #DhruvaNakshathram⭐️
Naracha Mudi▶️ https://t.co/mPoB48qOzk
Karichae Kalle▶️ https://t.co/ukEx0NVzeo#DhruvaNatchathiramFromNov24… pic.twitter.com/q0IjBxfBhk— Ondraga Entertainment (@OndragaEnt) November 4, 2023