சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். ஒவ்வொரு படத்துக்கும் விக்ரம் தனது கெட்டப்பை மாற்றி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கி வருகிறார். இப்போது விக்ரம் நடிப்பில் ‘துருவ நட்சத்திரம், பொன்னியின் செல்வன்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
சமீபத்தில், விக்ரம் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொன்னார். இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பா.இரஞ்சித் இயக்குகிறாராம். நடிகர் விக்ரம் – பா.இரஞ்சித் கூட்டணியில் உருவாகும் முதல் படம் இதுதானாம்.
இந்த படம் நடிகர் விக்ரமின் கேரியரில் 61-வது படமாம். இதனை ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். விக்ரம் நடிப்பில் 2002-ஆம் ஆண்டு வெளியான படம் ‘கிங்’. பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பிரபு சாலமன் இதனை இயக்கியிருந்தார்.
இதில் விக்ரமுக்கு ஜோடியாக சினேகா நடித்திருந்தார். மேலும், மிக முக்கிய ரோல்களில் நாசர், ஜனகராஜ், வடிவேலு, சந்தான பாரதி, சுமித்ரா, சாம்ஸ் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் உலக அளவில் ரூ.11 கோடி வசூல் செய்ததாம்.