விக்ரமின் மகாவீர் கர்ணா இயக்குனரின் அடுத்த படைப்பு!

  • July 15, 2020 / 11:13 PM IST

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரம் ஆர்.எஸ்.விமல் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருந்த புராணகால கதை தழுவிய திரைப்படம் “மகாவீர் கர்ணா”. விக்ரம் ரசிகர்கள் இந்தப் படம் எப்போது வெளிவரும் என்று எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட சில வீடியோக்களை இந்த படத்தின் இயக்குனர் விமல் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார்.

இந்த பீரியாடிக் டிராமா திரைப்படத்தின் படப்பிடிப்பில் விக்ரம் இந்த வீடியோவில் புராணகால உடைகளை அணிந்து கம்பீரமாக காட்சியளித்தார். அதனால் இந்தப் படத்தைப் பற்றிய ஆர்வம் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் விமல் தற்போது தனது அடுத்த படமான “தர்மராஜியா” பற்றி செய்தி வெளியிட்டுள்ளார். இந்த படம் ட்ராவேன்கோர் வரலாற்றை பற்றி பேச போகிறதாம். இந்த படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளில் நான்கு மொழி நடிகர்களின் நடிப்பில் உருவாக்கப்படவுள்ளதாம்.

இந்த திரைப்படத்தின் குழு குறித்து இன்னும் அதிகாரபூர்வமான தகவலை இவர் வெளியிடவில்லை. ஆனால் இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் ஒருவர் நடிக்கவுள்ளார் என்று கூறியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக லண்டனிலுள்ள விர்ச்சுவல் ரியாலிட்டி ஸ்டுடியோவில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

விக்ரம் நடிப்பில் “மகாவீர் கர்ணா” திரைப்படத்தில் மீதமுள்ள படப்பிடிப்பு, விக்ரம் மணிரத்னம் இயக்கத்தில் நடித்துவரும் “பொன்னியின் செல்வன்” படப்பிடிப்பு முடிந்ததும் தொடங்கப்படும் என்று செய்தி வந்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus