பாலாவின் ‘பிதாமகன்’ படத்துக்காக விக்ரம் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

  • March 21, 2023 / 11:46 AM IST

சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். ஒவ்வொரு படத்துக்கும் விக்ரம் தனது கெட்டப்பை மாற்றி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கி வருகிறார். இவர் நடிப்பில் ‘துருவ நட்சத்திரம், பொன்னியின் செல்வன் 2, தங்கலான்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

விக்ரமின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘பிதாமகன்’. இதில் விக்ரமுடன் இணைந்து சூர்யாவும் நடித்திருந்தார். இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பாலா இயக்கியிருந்தார்.

இதில் மிக முக்கிய ரோல்களில் சங்கீதா, லைலா, மனோபாலா, கருணாஸ், மகாதேவன் மற்றும் பலர் நடித்திருந்தனர். சூப்பர் ஹிட்டான இப்படத்தை ‘எவர்கிரீன் மூவி இண்டர்நேஷனல்’ நிறுவனம் சார்பில் வி.ஏ.துரை தயாரித்திருந்தார். தற்போது, இந்த படத்துக்காக நடிகர் விக்ரம் ரூ.1.25 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus