அடேங்கப்பா… ‘கடாரம் கொண்டான்’ படத்துக்காக விக்ரம் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

  • October 8, 2022 / 07:53 PM IST

சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். ஒவ்வொரு படத்துக்கும் விக்ரம் தனது கெட்டப்பை மாற்றி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கி வருகிறார். இவர் நடிப்பில் ‘துருவ நட்சத்திரம், பொன்னியின் செல்வன்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘பொன்னியின் செல்வன்’ கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸானது.

சமீபத்தில், விக்ரம் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொன்னார். இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பா.இரஞ்சித் இயக்குகிறாராம். நடிகர் விக்ரம் – பா.இரஞ்சித் கூட்டணியில் உருவாகும் முதல் படம் இதுதானாம்.

இந்த படம் நடிகர் விக்ரமின் கேரியரில் 61-வது படமாம். இதனை ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். விக்ரம் நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான படம் ‘கடாரம் கொண்டான்’. பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ராஜேஷ்.எம்.செல்வா இதனை இயக்கியிருந்தார்.

இந்த படத்தை ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தயாரித்திருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் அபி ஹாசன், அக்ஷரா ஹாசன் மற்றும் பலர் நடித்திருந்தனர். தற்போது, இப்படத்திற்காக விக்ரம் ரூ.14 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus