அடேங்கப்பா… கார்த்திக் சுப்புராஜின் ‘மகான்’-க்காக விக்ரம் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

  • March 6, 2023 / 11:36 AM IST

சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். ஒவ்வொரு படத்துக்கும் விக்ரம் தனது கெட்டப்பை மாற்றி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கி வருகிறார். இப்போது இவர் நடிப்பில் ‘துருவ நட்சத்திரம், பொன்னியின் செல்வன் 2, தங்கலான்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

கடந்த ஆண்டு (2022) பிரபல OTT தளமான ‘அமேசான் ப்ரைம்’யில் விக்ரம் – இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் வெளியான படம் ‘மகான்’. இந்த படத்தில் விக்ரமுடன் சேர்ந்து அவரது மகன் துருவ்வும் நடித்திருந்தார்.

இதில் விக்ரமுக்கு ஜோடியாக பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவரான சிம்ரன் நடித்திருந்தார். மேலும், முக்கிய ரோல்களில் பாபி சிம்ஹா, சனந்த், முத்துக்குமார், தீபக் பரமேஷ் ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்த படத்துக்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார், ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருந்தார், விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார். இந்த படம் விக்ரம் மற்றும் துருவ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, இப்படத்திற்காக நடிகர் விக்ரம் ரூ.14 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus