‘ரஜினி 170’-ல் வில்லனாக நடிக்க விக்ரமுக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இத்தனை கோடியா?

  • May 17, 2023 / 08:17 PM IST

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். இப்போது இவர் நடிப்பில் ‘ஜெயிலர், லால் சலாம்’ மற்றும் இயக்குநர் த.செ.ஞானவேல் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

ரஜினியின் 169-வது படமான ‘ஜெயிலர்’-ஐ பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான நெல்சன் இயக்குகிறார். ‘லால் சலாம்’ படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்குகிறார். இதில் விஷ்ணு விஷால் – விக்ராந்த் இணைந்து நடிக்க, ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் வலம் வரவிருக்கிறாராம். இவ்விரண்டு படங்களின் ஷூட்டிங்கும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கவுள்ள ‘தலைவர் 170’ படத்திற்கு அனிருத் இசையமைக்கவிருக்கிறார். இதனை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதில் ரஜினி போலீஸ் ரோலில் வலம் வரவிருக்கிறாராம். இதன் ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் ஜெட் ஸ்பீடில் நடக்கிறதாம்.

தற்போது, இந்த படத்தில் ரஜினிக்கு எதிராக மோதும் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் நடிக்க ‘சீயான்’ விக்ரமிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால், விக்ரம் வில்லன் ரோல் என்பதால் நடிப்பதா? வேண்டாமா? என்று யோசிக்கிறாராம். இதனால் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் விக்ரமிடம், இதில் நடிக்க ஓகே சொன்னால் ரூ.50 கோடி சம்பளம் தருவதாக கூறியிருக்கிறார் என்று தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus