சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். ஒவ்வொரு படத்துக்கும் விக்ரம் தனது கெட்டப்பை மாற்றி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கி வருகிறார். இவர் நடிப்பில் ‘துருவ நட்சத்திரம், தங்கலான்’ என 2 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் ‘தங்கலான்’ படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பா.இரஞ்சித் இயக்குகிறாராம். நடிகர் விக்ரம் – பா.இரஞ்சித் கூட்டணியில் உருவாகும் முதல் படம் இதுதானாம்.
இந்த படம் நடிகர் விக்ரமின் கேரியரில் 61-வது படமாம். இதனை ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இதில் பார்வதி, மாளவிகா மோகனன் என டபுள் ஹீரோயின்ஸாம். மேலும், மிக முக்கிய ரோல்களில் பசுபதி, டேனியல் கால்டாகிரோன் ஆகியோர் நடித்துள்ளார்கள்.
இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடிகை மாளவிகா மோகனனின் பர்த்டே ஸ்பெஷலாக அவரின் கேரக்டர் போஸ்டரை ரிலீஸ் செய்துள்ளனர்.
A powerful and modern force redefining herself
Wishing the fierce and fabulous @MalavikaM_ a wonderful birthday
Here's to a year filled with strength, talent, and empowerment!#HBDMalavikaMohanan #Thangalaan pic.twitter.com/ZYHkH3aQrH— Studio Green (@StudioGreen2) August 4, 2023