ஆதி முதல் அந்தம் வரை கெட்டவர்கள் இருந்தால் தான் நல்லவர்கள் அடையாளம் பெறுகிறார்கள். நல்லவனை நல்லவன் என்று அடையாளம் காட்ட கெட்டவர்கள் தேவைப்படுகிறார்கள், அதனால் வில்லன்கள் தான் எப்போதும் ஹீரோக்களை விட கெத்து…!
தமிழ் திரையுலகம் ஏராளமான வில்லன்களை கண்டுள்ளன. எல்லா படங்களிலும் வில்லன்களின் கேரக்டர்கள் ரசிக்கும்படி அமையாது, ஆனால் சில படங்களில் நடித்த வில்லன்களின் நடிப்பை இன்றும் நம்மாள் மறக்க முடியாது. அப்படிப்பட்ட வில்லன்கள் குறித்து தற்போது பார்க்கலாம். சிலர் ஒரு படத்தில் நடித்தாலும் அசாத்திய நடிப்பால் இன்றும் ரசிகர்கள் மனதில் கொடிக்கட்டி பறந்து கொண்டிருக்கிறார்கள்.
எம்என் நம்பியார்
எம்ஜிஆர் காலத்திலிருந்து தன் வில்லத்தனை காட்டிய நம்பியாருக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. வேஷம் தான் வில்லன் ஆனால் அப்படி ஒரு சாது நம்ம நம்பியார் சாமி…
அசோகன்
நகைச்சுவையாக வில்லத்தனம் செய்ய முடியும் என்பது நிரூபித்தவர் அசோகன். அதுவும் ஏற்ற இறக்கமாக அவர் பேசும் வசனங்களுக்கும் முகபாவனைகளுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்
சலீம் கௌஸ்
வெற்றிவிழா, திருடா திருடா, வேட்டைக்காரன் ஆகிய படங்களில் நடித்த சலீம் கௌஸ் ஒரு கிளாசிக் வில்லன், அவரின் குரலுக்கும் உடல் மொழியிலும் வில்லத்தனத்தை காட்டும் அசகாயசூரன்.
சத்யராஜ்
100 நாள், காக்கிசட்டை உள்ளிட்ட படங்களில் வித்தியாசமாக வில்லத்தனம் காட்டிய சத்யராஜை, கமல்ஹாசன் தான் ஹீரோவாக அறிமுகம் செய்தார். இதனால் கோலிவுட் ஒரு கிளாஸ் வில்லனை இழந்துவிட்டது.
ஆனந்த்ராஜ்
சிகப்பு நிறம், ஹீரோ அளவுக்கு உடற்கட்டு என கவரும் தோற்றத்துடன் அறிமுகமான ஆனந்த்ராஜ், வசன உச்சரிப்பு மற்றும் உடல்மொழியால் பல ரசிகர்களை தன்வசப்படுத்திக் கொண்டார்.
ரகுவரன்
90 கிட்ஸின் ஃபேவரெட் வில்லன் என்றால் அது ரகுவரன் தான், ரஜினி படங்களில் தொடர்ந்து வில்லத்தனம் காட்டிய ரகுவரன் இதுவரை ஒரு கமல் படத்தில் கூட நடிச்சது கிடையாது என்பது வரலாறு.
கலாபவன் மணி
ஜெமினி படம் 100 நாட்களையும் கடந்து ஓட முக்கிய காரணம் கலாபவன் மணியும், அவரின் உடல்மொழியும் தான்.
பிரகாஷ் ராஜ்
5 மொழிகளில் ஆட்சி செய்யும் பிரகாஷ்ராஜ், அறிவார்ந்த வில்லன்களின் ஒருவர். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்டும் அவர், இன்று வரை நம்பர் ஒன் வில்லன் தான்.
விஜய் சேதுபதி
விக்ரம் வேதா, பேட்ட, மாஸ்டர் என்று தொடர்ந்து வில்லத்தனம் காட்டும் விஜய் சேதுபதியின் நடிப்பு பற்றி சொல்லவே வேண்டாம். அவர் ஒரு கிளாசிக்.
அர்ஜுன்தாஸ்
பிஎஸ்.வீரப்பா, நம்பியார், சலீம் கௌஸ், ரகுவரன், ஆகியோரை தொடர்ந்து குரலுக்கு என்று வில்லனை ரசிகர்கள் விரும்பினார்கள் என்றால் அது அர்ஜுன்தாஸுக்கு மட்டும்தான். கைதி படத்தில் அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தி இருந்த அர்ஜுன்தாஸ் தற்போது கோலிவுட்டின் முக்கிய நடிகர்.