தமிழ் சினிமாவில் பாப்புலர் நடிகராக வலம் வருபவர் சசிகுமார். அறிமுகமான முதல் படத்தில் ஒரு நடிகராக மட்டுமின்றி, இயக்குநராகவும் சாதித்து காட்டியவர் சசிகுமார். அந்த படம் தான் ‘சுப்ரமணியபுரம்’. அதன் பிறகு ‘ஈசன்’ படத்தை இயக்கினாலும், ‘நாடோடிகள்’ என்ற படம் ஹீரோ சசிகுமாருக்கு அதிக லைக்ஸை பெற்று தந்தது.
‘நாடோடிகள்’ ஹிட்டிற்கு பிறகு நடிகர் சசிகுமாருக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘போராளி, சுந்தர பாண்டியன், குட்டிப் புலி, பிரம்மன், தாரை தப்பட்டை, வெற்றிவேல், கிடாரி, பலே வெள்ளையத் தேவா, கொடிவீரன், அசுரவதம், பேட்ட, கென்னடி கிளப், எனை நோக்கி பாயும் தோட்டா, நாடோடிகள் 2, கொம்பு வச்ச சிங்கம்டா, ராஜவம்சம், எம்ஜிஆர் மகன், காரி’ என படங்கள் குவிந்தது.
இப்போது சசிகுமார் நடிப்பில் ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், சசிகுமார் நடிக்காமல் மிஸ் பண்ண ஒரு சூப்பர் ஹிட் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. 2009-யில் சசிகுமார் தயாரிப்பில் ரிலீஸான தமிழ் படம் ‘பசங்க’.
கிஷோர், ஸ்ரீராம், பாண்டியன், விமல், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் மிக முக்கிய ரோல்களில் நடித்திருந்த இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பாண்டிராஜ் இயக்கியிருந்தார். இப்படத்தில் விமல் நடிக்கவிருந்த ரோலில் முதலில் நடிக்கவிருந்தது சசிகுமாராம். பின், சில காரணங்களால் சசிகுமாரால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.