சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் விமலா ராமன். இவருக்கு தமிழ் மொழியில் முதல் படமே இயக்குநர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் தான் அமைந்தது. அது தான் ‘பொய்’. இதில் ஹீரோவாக உதய் கிரண் நடித்திருந்தார். ‘பொய்’ படத்துக்கு பிறகு நடிகை விமலா ராமனுக்கு அடித்தது ஜாக்பாட்.
அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் தமிழில் ‘ராமன் தேடிய சீதை, இருட்டு’ என படங்கள் சேர்ந்தது. விமலா ராமன் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.
தற்போது, நடிகை விமலா ராமன் ‘உன்னாலே உன்னாலே’ புகழ் நடிகர் வினய்யை காதலித்து வருவதாகவும், மிக விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. வினய் சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ மற்றும் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ ஆகிய இரண்டு படங்களிலும் வில்லனாக மிரட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.