விஜய்யுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ண வினய்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் வினய். இவருக்கு அமைந்த முதல் தமிழ் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘உன்னாலே உன்னாலே’. ஜீவா இயக்கியிருந்த இந்த படத்தில் வினய்-க்கு ஜோடியாக சதா நடித்திருந்தார். இப்படத்தின் ஹிட்டிற்கு பிறகு வினய்-க்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘ஜெயம் கொண்டான், மோதி விளையாடு, மிரட்டல், ஒன்பதுல குரு, என்றென்றும் புன்னகை, அரண்மனை, சேர்ந்து போலாமா, துப்பறிவாளன், ஆயிரத்தில் இருவர், நேத்ரா, டாக்டர்’ என தமிழ் படங்கள் குவிந்தது. வினய் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கில் ஒரு படமும், ஹாலிவுட்டில் ஒரு படமும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்போது வினய் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘எதற்கும் துணிந்தவன்’. சூர்யா ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இந்நிலையில், வினய் நடிக்காமல் மிஸ் பண்ண ஒரு சூப்பர் ஹிட் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. 2012-யில் ரிலீஸான தமிழ் படம் ‘நண்பன்’.

‘தளபதி’ விஜய் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தை டாப் இயக்குநர்களில் ஒருவரான ஷங்கர் இயக்கியிருந்தார். இதில் முக்கிய ரோலில் ஸ்ரீகாந்த் நடித்திருந்தார். ஆனால், அந்த ரோலில் நடிக்க வைக்க வேண்டுமென இயக்குநர் ஷங்கரின் முதல் சாய்ஸாக இருந்தது வினய் தானாம். அப்போது, சில காரணங்களால் வினய் இப்படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம்.

Share.