‘டாக்டர்’-யில் வில்லன் ரோலில் மாஸ் காட்டிய வினய்… அதற்காக அவர் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

  • February 14, 2022 / 07:55 PM IST

சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் வினய். இவருக்கு அமைந்த முதல் தமிழ் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘உன்னாலே உன்னாலே’. ஜீவா இயக்கியிருந்த இந்த படத்தில் வினய்-க்கு ஜோடியாக சதா நடித்திருந்தார். இப்படத்தின் ஹிட்டிற்கு பிறகு வினய்-க்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘ஜெயம் கொண்டான், மோதி விளையாடு, மிரட்டல், ஒன்பதுல குரு, என்றென்றும் புன்னகை, அரண்மனை, சேர்ந்து போலாமா, துப்பறிவாளன், ஆயிரத்தில் இருவர், நேத்ரா, டாக்டர்’ என தமிழ் படங்கள் குவிந்தது. வினய் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கில் ஒரு படமும், ஹாலிவுட்டில் ஒரு படமும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்போது வினய் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘எதற்கும் துணிந்தவன்’. சூர்யா ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார். படத்தை வருகிற மார்ச் மாதம் 10-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். வினய்யின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘டாக்டர்’. இந்த படத்தில் ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடிக்க, அவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருந்தார்.

பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான நெல்சன் இதனை இயக்கியிருந்தார். இதில் வினய் வில்லன் ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. தற்போது, இந்த படத்துக்காக நடிகர் வினய் ரூ.40 லட்சம் சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus