2010 ஆம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் “விண்ணைத்தாண்டி வருவாயா”. இந்தத் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்தது. நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக த்ரிஷா இந்த படத்தில் நடித்திருந்தார். இருவருக்கும் இடையேயான காதல் காட்சிகள் இன்றுவரை ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.
மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில் இந்த படத்தின் காட்சிகள் கண்ணுக்கு இனிமையாக அமைந்திருந்தது. இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான விடிவி கணேஷ் முக்கியமான காமெடி கதாபாத்திரத்தில் நடிகர் சிம்புவுடன் படம் முழுவதும் பல காட்சிகளில் வந்திருப்பார்.
இந்த படத்தில் விடிவி கணேஷின் கதாபாத்திரம் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது. இதில் சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் இந்தப் படத்தில் விடிவி கணேஷ் நடித்திருக்கும் இந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க தேர்வு செய்யப்பட்டது காமெடி நடிகர் விவேக்கை தானாம்.
ஆனால் சில காரணங்களால் இந்தக் கதாபாத்திரத்தில் விடிவி கணேஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நடிகர் சிம்புவும் கௌதம் வாசுதேவ் மேனனும் நினைத்ததால் விடிவி கணேஷை நடிக்க சொன்னார்களாம்.
இந்த செய்தியை விடிவி கணேஷ் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். அவரது காட்சிகள் பெரிய அளவில் பாராட்டப்பட்டது என்பதும் படத்தில் இவர் கதாபாத்திரம் பிளஸ் பாயிண்ட் என்பதும் நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம்.
விவேக் நடித்திருந்தால் இந்த படத்தின் காட்சிகள் வேறுவிதமாக கலகலப்புடன் இருந்திருக்கும் என்பதும் உண்மை. இந்த படத்திற்கு பிறகு விடிவி கணேஷிர்ருக்கு பல பட வாய்ப்புகள் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.