நான் சொன்ன பிறகு தான் வினோத் இதை செய்தார் !

  • January 9, 2023 / 07:30 PM IST

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் துணிவு . நேர்கொண்ட பார்வை , வலிமை படத்திற்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைந்து உள்ளது . போனி கபூர் இந்த படத்தை தயாரித்து வருகிறார் . இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் . நடிகர் சமுத்திரக்கனி , நடிகை மஞ்சு வாரியர் இந்த படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்து உள்ளனர் .

2023 -ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11 -ஆம் தேதி பொங்கல் தினத்தில் இந்த படம் வெளியாக உள்ளது. துணிவு படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது .

இந்நிலையில் துணிவு படத்தின் இயக்குநர் எச். வினோத் பற்றிய சுவாரசிய தகவலை இயக்குநர் சீமான் பகிர்ந்து உள்ளார் . அதில் துணிவு பட இயக்குநர் வினோத் , நான் சொன்ன பிறகே , h.வினோத் என்ற பெயரை தமிழில் எச்.வினோத் என்று தனது பட போஸ்டர்களில் உபயோகிக்க ஆரம்பித்தார் என்று கூறியுள்ளார் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus