கடவுள் நம்பிக்கை குறித்த கேள்விக்கு நச் பதில் அளித்த வினோத் !

  • January 11, 2023 / 10:46 AM IST

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் துணிவு . நேர்கொண்ட பார்வை , வலிமை படத்திற்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைந்து உள்ளது . போனி கபூர் இந்த படத்தை தயாரித்து வருகிறார் . இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் . நடிகர் சமுத்திரக்கனி , நடிகை மஞ்சு வாரியர் இந்த படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்து உள்ளனர் .

2023 -ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11 -ஆம் தேதி பொங்கல் தினத்தில் இந்த படம் வெளியாக உள்ளது. துணிவு படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது .

இந்நிலையில் துணிவு படத்தை ப்ரோமோட் செய்யும் விதமாக வினோத் பல நேர்காணல் கொடுத்து வருகிறார் அந்த வகையில் ஒரு நேர்காணலில் இயக்குநர் வினோத்திடம் கடவுள் நம்பிக்கை பற்றி கேள்வி கேட்கப்பட்டது இதற்கு பதில் அளித்த வினோத் ” கடவுள் இருக்கு இல்லை என்பது குறித்து நான் பேசப்போவதில்லை ; கடவுள் நம்பிக்கை இல்லாமல் வாழ்வதற்கு , பெரிய தைரியமும் தெளிவுமும் தேவைப்படுகிறது ; அது எனக்கு முழுமையாக இல்லை ; என்னுடைய பிரச்சனைகள் மற்றும் சிக்கல்களிடம் இருந்து , நான் மீண்டு வருவதற்கு , எனக்கு கடவுள் தேவைப்படுகிறார் ; நான் கடவுளை நம்புவதால் மற்றவர்களுக்கு எந்த பிரச்சனையும் வரப்போவதில்லை ; கடவுளை வைத்து வியாபாரம் செய்யவோ , அதிகாரத்தை அடையவோ , பிறரை வெறுக்கவோ , பிரிக்கவோ முயலும் போது தான் கடவுள் பிரச்சனையாக மாறுகிறார் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus