தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ‘ஈஸ்வரன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்காக தனது உடல் எடையை வெகுவாக குறைத்த இவரின் புது லுக், அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியது மட்டுமில்லாமல், பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
பழைய சிம்பு திரும்பி விட்டார் என்று இவரது ரசிகர்கள் சிம்புவின் புது லுக்கை இணையதளத்தில் வைரலாகி வருகிறார்கள். இந்நிலையில் அவ்வப்போது இந்த படப்பிடிப்பு தளத்திலிருந்து அப்டேட் வந்த வண்ணம் உள்ளது.
ஏற்கனவே நடிகர் சிலம்பரசன் இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவு பெற்றுள்ளதாகவும், வருகிற தீபாவளியன்று இந்த படத்தின் டீசர் வெளியிடப்படும் என்றும் அதிகாரப்பூர்வமான தகவலை சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனால் விரைவில் வெளிவர இருக்கும் இந்தப் படத்தின் டீஸருக்காக சிம்பு ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள்.
இந்த படத்தின் டப்பிங் வேலைகளும் முடிந்து விட்டதாக நடிகர் சிலம்பரசன் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். வேகமாக முடிவடையும் இந்த படத்தின் வேலைகளால் சிம்பு ரசிகர்கள் இந்த படத்தின் வெளியீட்டுக்காக ஆவலாக காத்திருக்கிறார்கள். இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
https://twitter.com/madhavmedia/status/1326404933730635783?s=19