‘Virtual Reality’ film directed by AR Rahman!

  • December 1, 2022 / 04:50 PM IST

இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் ஏ.ஆர்.ரகுமான் . இந்த ஆண்டு இவர் இசையில் வெளியான பொன்னியின் செல்வன் 1 , கோப்ரா , வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட படங்களின் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனது . தற்போது இவரது இசையில் மாமன்னன் படம் உருவாகி வருகிறது .

ஏ.ஆர்.ரகுமான் . ’99 சாங்ஸ்’ என்ற திரைப்படத்திற்கு கதை எழுதி, இசையமைத்திருந்தார். அதே போல் ‘லி மஸ்க்’ என்ற திரைப்படத்தை முதல் முறையாக ஏ.ஆர்.ரகுமான் இயக்கியுள்ளார். 36 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த படம், ‘விர்ச்சுவல் ரியாலிட்டி’ என்ற தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பணிகள் முடிவடைந்த நிலையில், கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. ‘விர்ச்சுவல் ரியாலிட்டி’ மூலம் திரைப்படங்களை காண்பதற்கு பிரத்யேக கண்ணாடி போன்ற கருவி கொடுக்கப்படுகிறது. மேலும் பார்வையாளர் அமரும் நாற்காலியானது, திரைப்படத்தில் வரும் காட்சிக்கு ஏற்ப அசைவுகளை கொடுக்கிறது. இதனால் பார்வையாளர்கள் காட்சிக்குள் சென்றது போன்ற தத்ரூபமான அனுபவத்தைப் பெறுகிறார்கள்.

இத்தகைய தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ‘லி மஸ்க்’ திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் கண்டு ரசித்துள்ளார். விர்ச்சுவல் ரியாலிட்டி கண்ணாடியை அணிந்து கொண்டு ரஜினிகாந்த் படம் பார்க்கும் புகைப்படத்தை ஏ.ஆர்.ரகுமான் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ரஜினியின் இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus