மீண்டும் வரும் விருமன் ! எல்லாரும் ரெடியா ?

  • September 7, 2022 / 08:29 PM IST

நடிகர் கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளியான படம் சுல்தான் . இந்த படத்தை இயக்கியவர் பாக்கியராஜ் கண்ணன் . ராஷ்மிகா மந்தண்ணா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார் .இந்த படம் கலவையான விமர்சனங்களை ரசிகர்களிடம் பெற்றது .இந்த படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி விருமன் என்கிற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார் . இந்த படத்தை முத்தையா இயக்கி உள்ளார் . இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா விருமன் படத்திற்கு இசையமைத்து இருக்கிறார் .

மேலும் கஞ்சா பூ கண்ணால, மதுர வீரன் உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது .முதலில் இந்த படம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாக இருந்தது . ஆனால் வேறு சில காரணங்களால் இந்த படம் ஆகஸ்ட் 12 -ஆம் தேதி வெளியிடப்பட்டது . இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி இரண்டாவது முறையாக நடித்து இருக்கும் படம் என்பதால் இந்த படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது .

இந்நிலையில் திரையரங்குகளில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது . வசூலில் வெற்றி பெற்ற படமாக இந்த படம் அமைந்தது .இந்நிலையில் விருமன் படம் வருகின்ற 11-ஆம் தேதி அமேசான் நிறுவனத்தில் வெளியாக உள்ளது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus