சிவகார்த்திகேயனுக்கு பதிலாக நடித்த விஷால்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

  • March 17, 2022 / 11:01 AM IST

டிவி டு சினிமா வந்து சில ஆண்டுகளிலேயே முன்னணி ஹீரோக்களின் லிஸ்டில் இடம் பிடித்து மாஸ் காட்டியவர் சிவகார்த்திகேயன். ‘மெரினா, 3, மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல்’ ஆகிய படங்களில் தனக்கு கிடைத்த நடிக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார் சிவகார்த்திகேயன்.

இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. இப்போது, சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘அயலான், டான்’ மற்றும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி படம், இயக்குநர் அனுதீப் கேவி படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிக்காமல் மிஸ் பண்ண ஒரு சூப்பர் ஹிட் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. 2013-யில் ரிலீஸான தமிழ் படம் ‘பாண்டிய நாடு’. இந்த படத்தை பிரபல இயக்குநர் சுசீந்திரன் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக விஷால் நடித்திருந்தார். ஆனால், ஹீரோவாக நடிக்க வைக்க வேண்டுமென சுசீந்திரனின் முதல் சாய்ஸாக இருந்தது சிவகார்த்திகேயன் தானாம். பின், சில காரணங்களால் சிவகார்த்திகேயனால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus