தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘வாரிசு’-வை வம்சி இயக்கியிருந்தார். இந்த ஆண்டு (2023) ஜனவரி 11-ஆம் தேதி இப்படம் ரிலீஸானது.
‘வாரிசு’-வை தொடர்ந்து விஜய்-யின் 67-வது படமான ‘லியோ’வை ‘மாஸ்டர்’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தை ‘7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ லலித் குமார் தயாரிக்கிறார். படம் வருகிற அக்டோபர் 19-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.
இதனைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். இதற்கான ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடக்கிறதாம். இதன் ஷூட்டிங்கை வருகிற அக்டோபர் மாதம் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், விஜய் நடிக்காமல் மிஸ் பண்ண ஒரு சூப்பர் ஹிட் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.
2007-ல் ரிலீஸான தமிழ் படம் ‘தாமிரபரணி’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ஹரி இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக விஷால் நடித்திருந்தார். ஆனால், ஹரியின் முதல் சாய்ஸாக இருந்தது ‘தளபதி’ விஜய் தானாம். பின், சில காரணங்களால் விஜய்யால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.