விஷால் – எஸ்.ஜே.சூர்யாவின் ‘மார்க் ஆண்டனி’… 25 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

  • October 10, 2023 / 11:23 AM IST

சினிமாவில் பாப்புலர் நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் நடிப்பில் ‘துப்பறிவாளன் 2, மார்க் ஆண்டனி’ மற்றும் இயக்குநர் ஹரி படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘மார்க் ஆண்டனி’ படம் கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் ரிலீஸானது.

இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இதில் விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடித்துள்ளார். பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார்.

மேலும், மிக முக்கிய ரோல்களில் அபிநயா, செல்வராகவன், சுனில் ஆகியோர் நடித்துள்ளனர். இதனை ‘மினி ஸ்டுடியோஸ்’ என்ற நிறுவனம் சார்பில் வினோத் குமார் தயாரித்துள்ளார். இதற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 25 நாட்களில் இந்த படம் உலக அளவில் ரூ.105 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus