அடேங்கப்பா… விஷால் – எஸ்.ஜே.சூர்யாவின் ‘மார்க் ஆண்டனி’ முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

  • September 16, 2023 / 06:05 PM IST

சினிமாவில் பாப்புலர் நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் நடிப்பில் ‘துப்பறிவாளன் 2, மார்க் ஆண்டனி’ மற்றும் இயக்குநர் ஹரி படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘மார்க் ஆண்டனி’ படம் நேற்று (செப்டம்பர் 15-ஆம் தேதி) தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளில் ரிலீஸானது.

இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இதில் விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடித்துள்ளார். பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார்.

மேலும், மிக முக்கிய ரோல்களில் அபிநயா, செல்வராகவன், சுனில் ஆகியோர் நடித்துள்ளனர். இதனை ‘மினி ஸ்டுடியோஸ்’ என்ற நிறுவனம் சார்பில் வினோத் குமார் தயாரித்துள்ளார். இதற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், உலக அளவில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் ரூ.12 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus