விஷால் – எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடிக்கும் ‘மார்க் ஆண்டனி’… எதிர்பார்ப்பை எகிற வைத்த ஃபர்ஸ்ட் லுக்!

  • August 29, 2022 / 02:10 PM IST

சினிமாவில் பாப்புலர் நடிகராக வலம் வருபவர் விஷால். இப்போது இவர் நடிப்பில் ‘துப்பறிவாளன் 2, லத்தி, மார்க் ஆண்டனி’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘மார்க் ஆண்டனி’ படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடிக்கிறார். மேலும், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் எஸ்.ஜே.சூர்யா நடித்து வருகிறார். இதனை ‘மினி ஸ்டுடியோஸ்’ என்ற நிறுவனம் சார்பில் வினோத் குமார் தயாரித்து வருகிறார்.

இதற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். இதன் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரிலீஸ் செய்துள்ளனர்.

இந்த போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus