தெலுங்கு சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் டிம்பிள் ஹயாத்தி. இவர் தமிழில் ‘தேவி 2’ மற்றும் ‘வீரமே வாகை சூடும்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்திருக்கிறார்.
‘வீரமே வாகை சூடும்’ படத்தில் பிரபல நடிகர் விஷால் ஹீரோவாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழில் டிம்பிள் ஹயாத்தி சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான ஸ்டில்ஸை ஷேரிட்டு வருவதால் இவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
டிம்பிள் ஹயாத்தி நடித்து சமீபத்தில் ரிலீஸான தெலுங்கு படம் ‘ராமபாணம்’. ஹைதராபாத்தில் உள்ள ஜர்னலிஸ்ட் காலனி குடியிருப்பு பகுதியில் டிம்பிள் ஹயாத்தி அவரது நண்பர் விக்டர் டேவிட்டுடன் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருகிறார். இந்நிலையில், அதே இடத்தில் குடியிருக்கும் IPS அதிகாரியான ராகுல் ஹெக்டேவுக்கும், டிம்பிள் ஹயாத்திக்கும் பார்க்கிங்கில் கார் நிறுத்துவது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து ராகுலின் காரை, டிம்பிள் தனது காரை ஓட்டிச் சென்று மோதியதுடன், அக்காரை காலால் எட்டி உதைத்து சென்றிருக்கிறார். இதனால் ராகுல் ஹெக்டேவின் கார் டிரைவர் சேத்தன் குமார் டிம்பிள் ஹயாத்தி மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். பின், போலீஸார் டிம்பிளை அழைத்து விசாரித்துள்ளனர். இது தொடர்பாக டிம்பிள் தனது ட்விட்டர் பக்கத்தில் “அதிகாரத்தை பயன்படுத்தி எந்த தவறையும் மறைக்க முடியாது” என்று பதிவிட்டுள்ளார்.
Using power doesn’t stop any mistake .
— Dimple Hayathi (@DimpleHayathi) May 23, 2023
Misuse of power doesn’t hide mistakes .. . #satyamevajayathe
— Dimple Hayathi (@DimpleHayathi) May 23, 2023