‘லத்தி’ ஷூட்டிங் ஸ்பாட்டில் விஷாலுக்கு காயம்… தீயாய் பரவும் ஸ்டில்!

சினிமாவில் பாப்புலர் நடிகராக வலம் வருபவர் விஷால். இப்போது நடிகர் விஷால் நடிப்பில் ‘துப்பறிவாளன் 2, லத்தி’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘லத்தி’ படத்தை இயக்குநர் ஏ.வினோத் குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பாப்புலர் நடிகைகளில் ஒருவரான சுனைனா நடிக்கிறார்.

மேலும், மிக முக்கிய ரோலில் ‘இளைய திலகம்’ பிரபு நடிக்கிறார். சாம்.சி.எஸ் இசையமைத்து வரும் இதற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்து வருகிறார், என்.பி.ஸ்ரீகாந்த் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

இதனை ‘RANA புரொடக்ஷன்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் நடிகர்கள் ரமணா – நந்தா இருவரும் இணைந்து தயாரித்து வருகிறார்கள். சமீபத்தில், வெளியிடப்பட்ட இந்த படத்தின் டைட்டில் லுக் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதன் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், நேற்று இப்படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் போது நடிகர் விஷாலுக்கு காலில் காயம் ஏற்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஷூட்டிங் நிறுத்தப்பட்டதாம்.

Share.