Rathnam : விஷால் – ஹரி கூட்டணியில் உருவாகும் ‘ரத்னம்’… ரிலீஸ் தேதி அறிவிப்பு!

  • January 25, 2024 / 12:09 PM IST

சினிமாவில் பாப்புலர் நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் நடிப்பில் ‘துப்பறிவாளன் 2’ மற்றும் ‘ரத்னம்’ என 2 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘ரத்னம்’ படத்தை பிரபல இயக்குநர் ஹரி இயக்கி வருகிறார்.

இதில் விஷாலுக்கு ஜோடியாக ப்ரியா பவானி ஷங்கர் நடிக்கிறார். மேலும், மிக முக்கிய ரோல்களில் கௌதம் மேனன், சமுத்திரக்கனி, யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர். இதற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார், சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

சமீபத்தில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் மற்றும் டீசரை ரிலீஸ் செய்தனர். இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் மற்றும் டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. தற்போது, படத்தை வருகிற ஏப்ரல் 26-ஆம் தேதி தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus