Rathnam : விஷால் – ஹரி கூட்டணியில் உருவாகும் ‘ரத்னம்’… வெளியானது மிரட்டலான டீசர்!

  • December 1, 2023 / 08:52 PM IST

சினிமாவில் பாப்புலர் நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் நடிப்பில் ‘துப்பறிவாளன் 2’ மற்றும் இயக்குநர் ஹரி படம் என 2 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. தற்போது, ஹரி படத்துக்கு ‘ரத்னம்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலை விஷாலே ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததுடன், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரையும் ரிலீஸ் செய்துள்ளார். இந்த டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

இதில் விஷாலுக்கு ஜோடியாக ப்ரியா பவானி ஷங்கர் நடிக்கிறார். மேலும், மிக முக்கிய ரோல்களில் கௌதம் மேனன், சமுத்திரக்கனி, யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர். இதற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார், சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தை அடுத்த ஆண்டு (2024) சம்மரில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus