விஷாலின் ‘மார்க் ஆண்டனி’ டீசரை பார்த்துட்டு பாராட்டிய விஜய்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

  • April 27, 2023 / 02:16 PM IST

சினிமாவில் பாப்புலர் நடிகராக வலம் வருபவர் விஷால். இப்போது இவர் நடிப்பில் ‘துப்பறிவாளன் 2, மார்க் ஆண்டனி’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘மார்க் ஆண்டனி’ படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடிக்கிறார். மேலும், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் எஸ்.ஜே.சூர்யா நடித்து வருகிறார். இதனை ‘மினி ஸ்டுடியோஸ்’ என்ற நிறுவனம் சார்பில் வினோத் குமார் தயாரித்து வருகிறார்.

இதற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். தற்போது, விஷால் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவான ‘தளபதி’ விஜய்யை நேரில் சந்தித்து இந்த படத்தின் டீசரை காண்பித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. விஜய் டீசரை பார்த்துவிட்டு இப்படக்குழுவினரை பாராட்டினாராம். யூடியூபில் இன்று மாலை 6:30 மணிக்கு டீசரை ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus