‘மார்க் ஆண்டனி’ ஹிந்தி வெர்ஷனுக்காக லஞ்சம் வாங்கிய தணிக்கை குழு… ஆதாரத்துடன் வீடியோ வெளியிட்ட விஷால்!
September 29, 2023 / 07:25 PM IST
|Follow Us
சினிமாவில் பாப்புலர் நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் நடிப்பில் ‘துப்பறிவாளன் 2, மார்க் ஆண்டனி’ மற்றும் இயக்குநர் ஹரி படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘மார்க் ஆண்டனி’ படம் கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் ரிலீஸானது.
இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இதில் விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடித்துள்ளார். பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார்.
மேலும், மிக முக்கிய ரோல்களில் அபிநயா, செல்வராகவன், சுனில் ஆகியோர் நடித்துள்ளனர். இதனை ‘மினி ஸ்டுடியோஸ்’ என்ற நிறுவனம் சார்பில் வினோத் குமார் தயாரித்துள்ளார். இதற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், நேற்று இப்படம் ஹிந்தி மொழியிலும் வெளியானது. தற்போது, நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ மூலம் இப்படத்தின் ஹிந்தி வெர்ஷனின் சென்சார் சான்றிதழை வாங்க ரூ.6.5 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் என்று மும்பை மத்திய திரைப்படத் தணிக்கை குழு மீது குற்றம் சாட்டியிருக்கிறார்.
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus