விஷாலை கிண்டல் செய்த பிரகாஷ் ராஜ் !

  • November 5, 2022 / 02:09 AM IST

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகர் விஷால் . இவர் தற்போது மார்க் ஆண்டனி , லத்தி ஆகிய படங்களில் நடித்து வருகிறார் . மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்திலும் நடிக்க உள்ளார் என்ற செய்தியும் வெளியாக உள்ளது .இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் காசி சென்ற நடிகர் விஷால் ,பக்தர்களுக்காக அங்கு செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் குறித்து பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்திருந்தார். விஷாலின் இந்த டுவீட்டுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து இருந்தார் .

நடிகர் விஷாலின் இந்த ட்வீட் வைரல் ஆனது . இதை தொடர்ந்து இந்த பதிவிற்கு பதில் அளித்துள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ் . நடிகர் பிரகாஷ் ராஜ் , தமிழ் , தெலுங்கு , கன்னட , ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார் . சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன பொன்னியின் செல்வன் படத்திலும் இவர் முக்கியமான பாத்திரத்தில் நடித்து இருந்தார் .

சினிமா மட்டுமின்றி சமூகம் சார்ந்த மற்றும் அரசியல் சார்ந்த கருத்துக்களை பிரகாஷ் ராஜ் பதிவிடுவது வழக்கம் . மேலும் பிரதமர் மோடியை தொடர்ந்து விமர்சித்து வருகிறார் . இந்நிலையில் நடிகர் விஷால் மோடியை பாராட்டியதும் பிரகாஷ் ராஜ் ஷாட் ஓகே …..next என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார் . தற்போது இந்த பதிவு ட்ரெண்ட் ஆகி வருகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus