விஷால் – சுனைனா ஜோடியாக நடிக்கும் ‘லத்தி சார்ஜ்’… வெளியானது சூப்பரான டைட்டில் டீசர்!

  • October 18, 2021 / 11:13 AM IST

சினிமாவில் பாப்புலர் நடிகராக வலம் வருபவர் விஷால். இப்போது நடிகர் விஷால் நடிப்பில் ‘துப்பறிவாளன் 2’, ‘வீரமே வாகை சூடும்’, ‘எனிமி’ மற்றும் இயக்குநர் ஏ.வினோத் குமார் படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ஏ.வினோத் குமார் இயக்கும் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பாப்புலர் நடிகைகளில் ஒருவரான சுனைனா நடிக்கிறார்.

மேலும், மிக முக்கிய ரோலில் ‘இளைய திலகம்’ பிரபு நடிக்கிறார். சாம்.சி.எஸ் இசையமைத்து வரும் இதற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்து வருகிறார், என்.பி.ஸ்ரீகாந்த் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இதனை ‘RANA புரொடக்ஷன்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் நடிகர்கள் ரமணா – நந்தா இருவரும் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.

சமீபத்தில், ஆரம்பிக்கப்பட்ட இந்த படத்தின் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. தற்போது, இப்படத்திற்கு ‘லத்தி சார்ஜ்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை விஷாலே தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியதுடன், இதன் டைட்டில் லுக் டீசரையும் ரிலீஸ் செய்துள்ளார். இந்த டைட்டில் லுக் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus