விஷாலின் உள்நோக்கம் என்ன ?

  • January 25, 2023 / 09:24 AM IST

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கிறார் விஷால் . பிரபல தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டி அவர்களின் மகனான விஷால் நடிகர் அர்ஜுன் அவர்களிடம் துணை இயக்குனராக பணியாற்றினார் . பின்னர் இயக்குனர் காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான செல்லமே படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் விஷால் .

செல்லமே படத்திற்கு பிறகு சண்டக்கோழி , திமிரு , தாமிரபரணி , மலைக்கோட்டை என ஆக்ஷன் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் . நடிகர் விஷால் நடிப்பில் வெளியான வீரமே வாகை சூடும் , லத்தி ஆகிய படங்கள் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை . தற்போது மார்க் ஆண்டனி படத்தில் நடித்து வருகிறார் .

இந்நிலையில் நடிகர் விஷால் புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி .ஆர் அவர்களின் புகைப்படத்தை நெஞ்சில் பச்சைக் குத்தி உள்ளார் . தற்போது விஷால் பச்சை குத்தி இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது .

நடிகர் விஷால் இதுவரை தன்னை வெளியில் நடிகர் எம்.ஜி.ஆரின் ரசிகராக வெளிப்படுத்தியது இல்லை . ஆனால் திடீரென்று எம்.ஜி.ஆர் உருவத்தை பச்சை குத்துவதற்கு உள்நோக்கம் என்ன என்ற கேள்வி எழுந்து உள்ளது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus