‘நாடோடிகள்’ பட நடிகை அபிநயாவை திருமணம் செய்து கொள்ளப்போகிறாரா விஷால்?… தீயாய் பரவும் தகவல்!
November 1, 2022 / 10:53 AM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷால். பிரபல தயாரிப்பாளரின் மகனாக இருக்கும் விஷால், திரையுலகில் தனக்கென ஒரு ஃபார்முலாவை பிடித்து ஹிட் படங்களில் நடித்து வருகிறார்.
விஷாலுக்கு முதல் படம் ‘செல்லமே’. அதன் பிறகு விஷாலுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, மலைக்கோட்டை, சத்யம், தோரணை, தீராத விளையாட்டுப் பிள்ளை, பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், பூஜை, கதகளி, துப்பறிவாளன், இரும்புத் திரை, அயோக்யா, எனிமி, வீரமே வாகை சூடும்’ என படங்கள் குவிந்தது.
விஷாலின் படங்கள் அனைத்தும் தெலுங்கு மொழியிலும் ரிலீஸாவதால், ஆந்திரா மற்றும் தெலுங்கானா ரசிகர்களிடமும் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது விஷால் நடிப்பில் ‘துப்பறிவாளன் 2, லத்தி, மார்க் ஆண்டனி’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், விஷால் பிரபல நடிகை அபிநயாவை காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கோலிவுட்டில் தண்டோரா போடப்படுகிறது.
‘நாடோடிகள்’ படம் மூலம் ஃபேமஸான அபிநயா ‘ஈசன், பூஜை, தனி ஒருவன், குற்றம் 23’ போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது, விஷால் குறித்து அபிநயா மீடியாவுக்கு கொடுத்த ஒரு பேட்டியில் “விஷாலை திருமணம் செய்து கொள்ளப்போவதாக பரவும் செய்தி உண்மையல்ல, வதந்தியே. நானும் விஷாலும் இணைந்து ‘மார்க் ஆண்டனி’ படத்தில் கணவன் மனைவியாக நடித்து வருகிறோம். இதனால் தான் இப்படி ஒரு செய்தி பரவுகிறது என்று நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus