தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகர் விஷால் . இவர் தற்போது மார்க் ஆண்டனி , லத்தி ஆகிய படங்களில் நடித்து வருகிறார் . மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்திலும் நடிக்க உள்ளார் என்ற செய்தியும் வெளியாக உள்ளது . இதற்காக இவருக்கு பல கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது .
இந்நிலையில் சென்னை மாத்தூரில் திருவள்ளூர் மாவட்ட விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் 11 ஏழை ஜோடிகளுக்கு திருமண நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் நடிகர் விஷால் கலந்து கொண்டு 3 மத முறையிலும் வழிபட்டு ஒவ்வொரு ஜோடிகளுக்கும் தாலி எடுத்து கொடுத்து இலவச திருமணத்தை நடத்தி வைத்தார். இதில் 51 பொருட்கள் அடங்கிய சீர்வரிசையை விஷால் மணமக்களுக்கு வழங்கினார்.
விழாவில் பேசிய விஷால், 11 ஏழை ஜோடிகள் திருமணத்தை நடத்தி வைத்ததில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த 11 தங்கச்சிகளை மாப்பிள்ளைகள் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களது மகிழ்ச்சியே எனது மகிழ்ச்சி. எனக்கு பட்டு வேட்டி, சட்டை கட்டுவது ரொம்ப பிடிக்கும். இதற்காக இந்த விழாவுக்கு நான் பட்டு சட்டையில் வந்துள்ளேன். படப்பிடிப்பு தளங்களில் எனக்கு பல்வேறு அடிகள் விழுந்தன. ஏதோ எனது மனதை பாதிக்கும் விதமாக சில சம்பவங்கள் நடைபெற்றன. எனக்கு மனதில் தோன்றியதை நான் உடனுக்குடன் செய்து விடுவேன். அது போல ஏழை ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என எனது மனதில் தோன்றியது.
அதுபோல இன்று இந்த ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்துள்ளேன். இது எனக்கு பெருமையாக உள்ளது. ஏழைகளுக்கு செய்வது பெரும் பாக்கிய மாக கருதுகிறேன். இந்த 11 ஜோடிகளின் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் படிப்புக்கு உதவி செய்வேன். இந்த இலவச திருமணங்கள் போன்று மற்ற மாவட்டங்களிலும் எனது இயக்கம் சார்பில் சிறப்பாக நடைபெற ஏற்பாடு செய்வேன். ஏழைகளின் மகிழ்ச்சியே எனது மகிழ்ச்சி. நடிகர் சங்க கட்டிடம் பணிகள் மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. விரைவில் பணிகள் முடிவடைய உள்ளன. அந்த விழாவுக்கும் நீங்கள் எல்லோரும் வரவேண்டும். நடிகர் சங்கத்தில் 3 ஆயிரத்து 500 கலைஞர்கள் உறுப்பினராக உள்ளனர். அவர்களின் எதிர்காலத்திற்காக நான் பாடுபட்டு வருகிறேன். அவர்களது மகிழ்ச்சியே எனது மகிழ்ச்சி.
எனக்கு யாரிடமும் பிச்சை கேட்கும் பழக்கம் கிடையாது. ஆனால் ஒரு மாணவியின் படிப்புக்காக கல்லூரியில் பிச்சை கேட்டு அந்த மாணவியை உயர்தர கல்வி பெற வைத்து உள்ளேன். தற்போது அந்த மாணவி மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். அவர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். அது எனக்கு பெரும் மகிழ்ச்சி தருகிறது. ஏழை குழந்தைகளை படிக்க வைப்பது எனக்கு மிகவும் சந்தோஷத்தை தருகிறது. இவ்வாறு விஷால் பேசினார்.
r