Vishal & Cyclone Michaung : “எம்.எல்.ஏக்கள் வெளியே வந்து உதவி செய்யுங்க”… தனது வீட்டிற்குள் புகுந்த மழைநீரால் கடுப்பாகி பேசிய விஷால்!

  • December 5, 2023 / 02:48 PM IST

சினிமாவில் பாப்புலர் நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் நடிப்பில் ‘துப்பறிவாளன் 2’ மற்றும் ‘ரத்னம்’ என 2 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘ரத்னம்’ படத்தை பிரபல இயக்குநர் ஹரி இயக்கி வருகிறார்.

இதில் விஷாலுக்கு ஜோடியாக ப்ரியா பவானி ஷங்கர் நடிக்கிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படத்தை அடுத்த ஆண்டு (2024) சம்மரில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

‘ரத்னம்’ படத்தின் ரிலீஸுக்கு பிறகு தானே இயக்கி, நடிக்கும் ‘துப்பறிவாளன் 2’ படத்தின் ஷூட்டிங்கை துவங்க விஷால் திட்டமிட்டுள்ளார். தற்போது, விஷால் ட்விட்டர் பக்கத்தில் “‘மிக்ஜாம்’ புயல் காரணத்தினால் சென்னையில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் எனது வீட்டிற்குள் மழை நீர் புகுந்துவிட்டது. சென்னை தொகுதி எம்.எல்.ஏ-க்கள் தயவு செய்து வெளியே வந்து பொதுமக்களுக்கு உதவி செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டு ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus