விஷால் – ராஷி கண்ணா ஜோடியாக நடித்த ‘அயோக்யா’… இதன் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

  • February 24, 2023 / 02:58 PM IST

சினிமாவில் பாப்புலர் நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் நடிப்பில் ‘துப்பறிவாளன் 2, மார்க் ஆண்டனி’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘மார்க் ஆண்டனி’ படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடிக்கிறார். மேலும், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் எஸ்.ஜே.சூர்யா நடித்து வருகிறார். இதனை ‘மினி ஸ்டுடியோஸ்’ என்ற நிறுவனம் சார்பில் வினோத் குமார் தயாரித்து வருகிறார்.

விஷாலின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘அயோக்யா’. இதில் விஷாலுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்க, அறிமுக இயக்குநர் வெங்கட் மோகன் இதனை இயக்கியிருந்தார். மேலும், மிக முக்கிய ரோல்களில் பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார், பூஜா தேவரியா மற்றும் பலர் நடித்திருந்தனர். தற்போது, இந்த படத்தின் மொத்த வசூல் ரூ.30.15 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus