பாலிவுட்டில் மாஸ் காட்டப்போகும் விஷால்… ‘சக்ரா’ படத்தின் ஹிந்தி வெர்ஷன் ட்ரெய்லர்!

‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது, திரையரங்குகளும் மூடப்பட்டது. சமீபத்தில், சில நிபந்தனைகளுடன் திரையரங்குகளை திறக்கவும், ஷூட்டிங் எடுக்கவும் அரசாங்கம் அனுமதி கொடுத்து விட்டது. இருப்பினும் டாப் ஹீரோக்களின் படங்கள் எதுவும் தியேட்டரில் ரிலீஸாகவில்லை.

கடந்த ஜனவரி 13-ஆம் தேதி தான் பொங்கல் ஸ்பெஷலாக விஜய்யின் ‘மாஸ்டர்’ படமும், ஜனவரி 14-ஆம் தேதி சிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படமும் திரையரங்குகளில் வெளியானது. ‘மாஸ்டர், ஈஸ்வரன்’ ஆகிய இரண்டு படங்களுக்கும் கிடைத்திருக்கும் வரவேற்பினால், விஷால் தனது ‘சக்ரா’ படத்தை வருகிற பிப்ரவரி 19-ஆம் தேதி திரையரங்குகளில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் ரிலீஸ் செய்யவிருப்பதாக சமீபத்தில் அறிவித்தார்.

தற்போது, இந்த படத்தை ஹிந்தி மொழியிலும் டப் செய்து இதே தேதியில் ரிலீஸ் செய்யவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதன் ஹிந்தி வெர்ஷனுக்கு ‘சக்ரா கா ரக்ஷக்’ (CHAKRA KA RAKSHAK) என டைட்டில் சூட்டப்பட்டுள்ளதாம். இன்று ஹிந்தி வெர்ஷனின் போஸ்டர்ஸ் மற்றும் ட்ரெய்லரையும் ரிலீஸ் செய்துள்ளனர். இப்படத்தை MS.ஆனந்தன் இயக்க, டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் ஷ்ரதா ஸ்ரீநாத், ரோபோ ஷங்கர், மனோபாலா, கே.ஆர்.விஜயா, ஸ்ருஷ்டி டாங்கே, ரெஜினா கசாண்ட்ரா நடித்துள்ளார்கள்.

Share.