விஷாலின் ‘சக்ரா’ திரைப்படத்தின் புதிய அப்டேட்!

  • October 29, 2020 / 07:00 AM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான விஷால் நடித்து அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் “சக்ரா”. இந்தப் படம் விரைவில் OTTயில் வெளியாகும் என்று தற்போது விஷால் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

அறிமுக இயக்குனரான எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கஸாண்ட்ரா, சிருஷ்டி டாங்கே ஆகிய நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

யுவன்சங்கர்ராஜா இசையில் இந்த படத்திற்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.இந்த படத்தின் டிரெய்லர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஏற்கனவே வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த படத்தில் விஷால் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவலர்களாக நடித்துள்ளார்கள் என்றும், சுதந்திர தினத்தன்று நடக்கும் கொள்ளை சம்பவத்தை துப்பறியும் காவலர்களாக இவர்கள் நடித்துள்ளார்கள் என்றும் ட்ரெய்லர் மூலம் தெரிகிறது.

பல பிரச்சினைகளை தாண்டி தற்போது நடந்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஓரளவு முடிந்து விட்டது எனவும் இந்த படத்தின் பின்னணி வேலைகளுக்கான பூஜை சமீபத்தில் வெற்றிகரமாக நடந்துள்ளதாகவும் தற்போது தகவல் வந்துள்ளது. விரைவில் சக்ரா திரைப்படம் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus