விஷால் – அர்ஜுன் இணைந்து நடித்த ‘இரும்புத்திரை’… இதன் மொத்த வசூல் இவ்ளோவா?

  • February 23, 2023 / 01:21 AM IST

சினிமாவில் பாப்புலர் நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் நடிப்பில் ‘துப்பறிவாளன் 2, மார்க் ஆண்டனி’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘மார்க் ஆண்டனி’ படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடிக்கிறார். மேலும், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் எஸ்.ஜே.சூர்யா நடித்து வருகிறார். இதனை ‘மினி ஸ்டுடியோஸ்’ என்ற நிறுவனம் சார்பில் வினோத் குமார் தயாரித்து வருகிறார்.

விஷாலின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘இரும்புத்திரை’. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சமந்தா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பி.எஸ்.மித்ரன் இதனை இயக்கியிருந்தார்.

இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் அர்ஜுன், ரோபோ ஷங்கர், டெல்லி கணேஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் சூப்பர் ஹிட்டானது. தற்போது, இதன் மொத்த வசூல் ரூ.61 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus