விஷால் – கேத்ரின் திரசா ஜோடியாக நடித்த ‘கதகளி’… இப்படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

  • February 16, 2023 / 07:38 PM IST

சினிமாவில் பாப்புலர் நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் நடிப்பில் ‘துப்பறிவாளன் 2, மார்க் ஆண்டனி’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘மார்க் ஆண்டனி’ படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடிக்கிறார். மேலும், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் எஸ்.ஜே.சூர்யா நடித்து வருகிறார். இதனை ‘மினி ஸ்டுடியோஸ்’ என்ற நிறுவனம் சார்பில் வினோத் குமார் தயாரித்து வருகிறார்.

விஷாலின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘கதகளி’. இந்த படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்க, இதில் ஹீரோயினாக கேத்ரின் திரசா நடித்திருந்தார்.

மேலும், மிக முக்கிய ரோல்களில் மதுசூதனன் ராவ், கருணாஸ், இமான் அண்ணாச்சி, மைம் கோபி, பவன் ஆகியோர் நடித்திருந்தனர். இதற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மொத்த வசூல் ரூ.28.90 கோடியாம்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus