டிசம்பர் 22-ஆம் தேதி ரிலீஸாகும் விஷாலின் ‘லத்தி’… எதிர்பார்ப்பை எகிற வைத்த ட்ரெய்லர்!

  • December 12, 2022 / 10:01 PM IST

சினிமாவில் பாப்புலர் நடிகராக வலம் வருபவர் விஷால். இப்போது இவர் நடிப்பில் ‘துப்பறிவாளன் 2, லத்தி, மார்க் ஆண்டனி’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘லத்தி’ படத்தை இயக்குநர் ஏ.வினோத் குமார் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பாப்புலர் நடிகைகளில் ஒருவரான சுனைனா நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோலில் ‘இளைய திலகம்’ பிரபு நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இதற்கு பாலசுப்ரமணியம் – பாலகிருஷ்ணா தோட்டா இருவரும் ஒளிப்பதிவு செய்துள்ளனர், என்.பி.ஸ்ரீகாந்த் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

இதனை ‘RANA புரொடக்ஷன்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் நடிகர்கள் ரமணா – நந்தா இருவரும் இணைந்து தயாரித்துள்ளார்கள். தற்போது, இந்த படத்தின் ட்ரெய்லரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரிலீஸ் செய்துள்ளார்.

இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்துள்ளது. படத்தை வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus