சினிமாவில் பாப்புலர் நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் நடிப்பில் ‘துப்பறிவாளன் 2, மார்க் ஆண்டனி’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘மார்க் ஆண்டனி’ படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடிக்கிறார். மேலும், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் எஸ்.ஜே.சூர்யா நடித்து வருகிறார். இதனை ‘மினி ஸ்டுடியோஸ்’ என்ற நிறுவனம் சார்பில் வினோத் குமார் தயாரித்து வருகிறார்.
விஷாலின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘மலைக்கோட்டை’. இந்த படத்தை இயக்குநர் ஜி.பூபதி பாண்டியன் இயக்க, இதில் ஹீரோயினாக ப்ரியாமணி நடித்திருந்தார்.
மேலும், மிக முக்கிய ரோல்களில் ஆஷிஷ் வித்யார்த்தி, ஊர்வசி, ஆர்த்தி, தேவராஜ், அஜய், மயில்சாமி ஆகியோர் நடித்திருந்தனர். இதற்கு மணிசர்மா இசையமைத்திருந்தார். இந்த படத்தின் மொத்த வசூல் ரூ.22.50 கோடியாம்.