விஷால் – ஸ்ரீதிவ்யா ஜோடியாக நடித்த ‘மருது’… இப்படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

  • February 18, 2023 / 07:23 PM IST

சினிமாவில் பாப்புலர் நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் நடிப்பில் ‘துப்பறிவாளன் 2, மார்க் ஆண்டனி’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘மார்க் ஆண்டனி’ படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடிக்கிறார். மேலும், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் எஸ்.ஜே.சூர்யா நடித்து வருகிறார். இதனை ‘மினி ஸ்டுடியோஸ்’ என்ற நிறுவனம் சார்பில் வினோத் குமார் தயாரித்து வருகிறார்.

விஷாலின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘மருது’. இந்த படத்தை இயக்குநர் முத்தையா இயக்க, இதில் ஹீரோயினாக ஸ்ரீதிவ்யா நடித்திருந்தார்.

மேலும், மிக முக்கிய ரோல்களில் சூரி, ஆர்.கே.சுரேஷ், ராதாரவி, மாரிமுத்து, அருள்தாஸ் ஆகியோர் நடித்திருந்தனர். இதற்கு டி.இமான் இசையமைத்திருந்தார். இந்த படத்தின் மொத்த வசூல் ரூ.25 கோடியாம்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus